web log free
June 20, 2026

ரூ. 210.5 மில்லியன் பெறுமதி தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய ஊழியர் கைது

ரூ. 210.5 மில்லியனுக்கும் அதிக பெறுமதியுள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் விமான நிலைய ஊழியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய குறித்த ஊழியர் இன்று (14) காலை 6:50 மணியளவில் 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு கால்களின் காலுறைகளுக்குள் மறைத்து வைத்து, ஊழியர்களுக்கான வெளியேறும் வாயில் (staff gate) வழியாக கடத்த முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 24 கெரட் தங்கத்தின் பெறுமதி சுமார் ரூ. 210,524,575.35 (ரூ. 210.5 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது இந்த தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் சுங்கம் மேலும் தெரிவித்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd