web log free
May 23, 2026

48 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பு

இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ரயில் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிந்ததை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வேதனை பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்னிறுத்தி ரயில் தொழிற்சங்க ஒன்றியம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு முன்னர் தீர்மானித்திருந்தது.

எனினும் நிதியமைச்சருடனான பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக குறித்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd