கடந்த பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் வெற்றியை செல்லாது என தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.