ரயில் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் நிலையில், பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக மேலதிக அரச பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உபாலி மாரசிங்க கூறியுள்ளார்.
பஸ் டிப்போக்கள், பிரதேச முகாமையாளர்களுக்கு இது தொடர்பில் உரிய ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளதுடன், தேவையான எருபொருள், மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.