முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவுசெய்து, அது தொடர்பில் சந்தேகநபர்கள் எவரேனும் இருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (29) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக, உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் என்ற போலிக்காரணத்தின் கீழ் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கை, மேலும் விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக ஜனவரி 28 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான், புதன்கிழமை (29) உத்தரவிட்டுள்ளார்.


