களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்குறுந்த கடற்கரையில் இருந்து இன்று (05) காலை மீட்கப்பட்டது ஹஷிஷ் போதைப்பொருள் என தற்போது தெரியவந்துள்ளது.
அங்கு சுமார் 12 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன், அதன் பெறுமதி 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாகம் என்று கூறப்படுகிறது.
கடற்கரையில் ஒதுங்கியிருந்த இந்தப் பொதியை முதலில் கண்டது அருகில் உள்ள சுற்றுலா விடுதி ஊழியர்கள் என்பதுடன், அவர்கள் இது குறித்து பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
அதன் பின்னர், கட்டுக்குறுந்த பொலிஸ் விசேட அதிரடிப் படை பயிற்சி முகாம் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, குறித்த பொதியை மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து களுத்துறை கட்டுக்குறுந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும், களுத்துறை தெற்குப் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


