2024 ஆம் ஆண்டு கனடா ஒட்டாவாவில் நடந்த ஒரு கத்திக்குத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் மற்றும் ஒரு குடும்ப நண்பர் உட்பட 06 பேரை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையர் பெப்ரியோ டி சொய்சா (20 வயது), என்பவருக்கு கனேடிய நீதிமன்றம் 25 ஆண்டுகள் பிணை இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கொலையாளியான பெப்ரியோ டி சொய்சா ஒட்டாவாவின் பர்ஹேவன் புறநகர்ப் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்துள்ளார்
நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக, இலங்கை மாணவரான சொய்ஷா , விக்ரமசிங்கவின் குடும்பத்துடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொலை இடம்பெற்ற தினத்திலேயே சொய்ஷா கைது செய்யப்பட்டார்.
மாணவர் விசா காலம் நிறைவடைந்த நிலையில் கனடாவில் தங்கியிருந்த சொய்ஷா, தன்னிடம் பணம் இல்லாது போனமையால் கொலையை செய்ய எத்தணித்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
கொலையை நடத்துவதற்கு 05 நாட்களுக்கு முன்னரே தாம் திட்டத்தை வகுத்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை கொண்டு, ஏற்கனவே தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர்களான 35 வயதுடைய தர்ஷினி பண்டாரநாயக்க எனும் தாய், அவரது 7 வயது பிள்ளையான இனுக விக்ரமசிங்க, 4 வயது பிள்ளையான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயது பிள்ளையான ரியானா விக்ரமசிங்க, 2 மாதக் குழந்தையான கெல்லி விக்ரமசிங்க, மற்றும் குடும்ப நண்பரான 40 வயதுடைய அமரகோன் முதியன்சலாகே காமினி அமரகோன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
செய்தது பிழை வருந்துகிறேன்.
நீதிபதி ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபோது,
விசாரணை முழுவதும் டி சொய்சா அமைதியாக அமர்ந்திருந்ததுடன் தான் செய்ததற்கு மிகவும் வருந்துவதாகவும், "நான் செய்ததன் உண்மையை ஒப்புக்கொள்வதில் வாழ்நாள் முழுவதும் செலவிடுவேன்" என்றும் குற்றவாளியான டி.சொய்ஷா தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு "நல்லவர்களாகவும், அன்பானவர்களாகவும்" இருந்தார்கள் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும் தற்போது குற்றத்தை ஒப்புக் கொண்டாலும், ஒரு சமூகத்தை பதறவைக்கும் வகையில் கொலை நடத்தப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை சீர்குழைத்து, கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனால் நீதிமன்றத்தின் கூட்டுத் தீர்மானங்களுக்கு தாம் இணங்குவதாக தெரிவித்த நீதிபதி பிலிப்ஸ் வழக்கை நிறைவுறுத்தியுள்ளார்.
கொலைக் குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளமையால் சந்தேகநபருக்கு, பிணையற்ற வகையில் குறைந்தபட்சம் 25 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.


