web log free
January 02, 2026

ஆணுறுப்பை திறந்து காட்டிய நபருக்கு விளக்கமறியல்

தனது ஆணுறுப்பை காண்பித்த பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான், திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார்.

திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் முன், தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு செய்தார்.

பொத்துவில் அறுகம்பே பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றில் நியூசிலாந்து சுற்றுலா பயணி பயணித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் திக்கோவில் பிரதேசத்தில், மோட்டார் சைக்கிளில் கடந்த மாதம் 25ம் திகதி சென்ற ஆண் ஒருவர், முச்சக்கர வண்டியை இடைமறித்து அவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த பெண் அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததையடுத்து குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் ஊடாக பொலிஸார் வெளியிட்டு அவர் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து குறித்த நபர் தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (16) அன்று விசாரணையை திருக்கோயில் பொலிஸார் மேற்கொண்டனர்.

சந்தேக நபர், ஒரு பிள்ளையின் தந்தையான பொகவந்தலாவையைச் சேர்ந்தவர் 25 வயதுடைய எனவும் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் திருமணம் முடித்து கடந்த சில வருடமாக திருக்கோவில் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதையடுத்து அவர் வாடகைக்கு இருந்த வீட்டை முற்றுகையிட்ட போது அவர் அங்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெளியேறி களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸார் அங்கு சென்றபோது அவர் அங்கும் இல்லை. தலைமறைவாக இருந்த நிலையில், தனது தலையை மொட்டையடித்து தோற்றத்தை மாற்றிக் கொண்டிருந்த நிலையில் மருதமுனை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அருகில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர், பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் திங்கட்கிழமை (17) ஆஜர்படுத்தப்பட்டார். அப் போது அவரை எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd