web log free
April 06, 2026

பொலிஸ்மா அதிபரின் மனு 31ஆம் திகதி விசாரணைக்கு

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமை மனுவினை அடுத்த மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தன்னை கட்டாய விடுமுறையில் அனுப்பியமை சட்டவிரோதமானதெனவும், அதன் ஊடாக, தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவானது இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அடுத்த மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd