இஸ்லாம் மத பாடசாலை நூல்களில் உள்ள அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான விவரங்களை நீக்குமாறு கோரி, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பௌத்த தகவல் கேந்திரநிலையமும், சிங்களே அமைப்பும் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவு செய்தன.
முஸ்லிம் மதத்தில் இருந்து மாறுகின்றவர்களையும் முஸ்லிம் அல்லாதவர்களையும் கொலை செய்து தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் சமய பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியாக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான வழிகள் ஊடாக பாடசாலை மட்டங்களிலேயே பயங்கரவாதம் போதிக்கப்பட்டு வந்துள்ளது என்று பிக்குகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.