ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு வாக்குமூலம் வழங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.
பாடசாலை புத்தகங்களை அச்சிடுவதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள முறைபாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மாதம் 8ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் நோட்டீஸ் விடுத்துள்ளதாக, அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.