இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ஜனவரி முதல் நாம் அதற்காக உழைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கட்சியின் இளம் மட்டத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடந்த போதே ரணில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டத்தினரிடம் கூறிய முன்னாள் ஜனாதிபதி, ஜனவரி முதல் அதற்காக பாடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


