நாடெங்கிலும் மலசல கூட வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அத்தகைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாத்தறையில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய அமைச்சர் அறிவித்தார்.
சமகால அரசாங்கம் மக்கள் உணர்வுகளை அறிந்திருக்கிறது. மேல் - கீழ் - நடுத்தர மட்டங்களில் சமமாக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கிறது.
கம்பெரலிய திட்டத்தின் மூலம் கடந்த வருடத்தின் கடைசி நான்கு மாதங்களில் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்காகவும் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கிராமப்புறங்களுக்கு இவ்வளவு அதிகமான நிதி வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




