web log free
April 05, 2026

ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியும் - எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து புதிய கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.

எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கடந்த 17ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் இடம்பெறவிருந்த இந்தப் பேச்சுவார்த்தை இன்று வரை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd