இன்று (29) இலங்கையின் பல பகுதிகளில் காற்றுத் தரம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட சில மாவட்டங்களில் காற்றுத் தரம் உணர்திறன் கொண்ட குழுக்களுக்கு தீங்கான நிலையை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிலை தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


