இன்று (31) முதல் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக சுமார் 1,200 காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.
2026 புதிய ஆண்டை கொண்டாடுவதற்காக நாளை கொழும்பு நகரத்திற்கு பெருமளவான மக்கள் மற்றும் வாகனங்கள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சிறப்பு போக்குவரத்து திட்டம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளதாக காவல்துறை மேலும் அறிவித்துள்ளது.


