web log free
December 02, 2023

40 மீனவ படகுகள் தீக்கிரை

ஹூங்கம – குருபொக்குண துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலின் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 மீனவ படகுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தங்காலை தீயணைப்புப் பிரிவினர் மற்றும் ஹூங்கம பொலிஸார் பிரதேச மக்களுடன் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.