web log free
February 24, 2026

50 லட்சம் இழப்பீடு இன்று

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில், இன்று (9) அனுராதபுரத்தில் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ‘திட்வா’ (Ditwa) புயல் காரணமாக முழுமையாக சேதமடைந்த ஒரு வீட்டிற்கு பதிலாக புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அரசால் ரூ. 50 இலட்சம் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நடைப்பெறுகிறது.

இதனடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய அனர்த்த நிவாரண சேவை மையம் (National Disaster Relief Services Centre) இந்த திட்டத்திற்கான தொடர்புடைய சுற்றறிக்கையை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

ஒரு வீடு முழுமையாக சேதமடைந்ததாக அடையாளம் காணப்படுவது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வழங்கியுள்ள வரையறைகள் மற்றும் தொழில்நுட்ப அளவுகோல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd