web log free
December 02, 2023

'மரண தண்டனை குறித்து அறிவிக்கப்படவில்லை'


மரண தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு அறிவிக்கப்பட்டால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை நிறைவேற்றுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜே.டப்ளியூ. தென்னகோன் கூறியுள்ளார்.

போதைப் பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.