தற்போதைய அரசாங்கத்தின் முடிவு, மக்கள் விடுதலை முன்னணியையும் (ஜே.வி.பி) முடிவுக்கு கொண்டு வரும் வகையிலேயே அமையும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
“இது இறுதியில் மேல்மட்டத்தில் இருப்பவர் எங்காவது செல்வதுடன் முடிவடையும். அதே நேரத்தில் ஜே.வி.பி-யையும் முடிவுக்கு கொண்டு வந்தபடியே இது நிறைவடையும். இதனால் நாடு மிகப்பெரிய ஆபத்துக்குள்ளாகும்,” என அவர் கூறினார்.
இந்த நிலை குறித்து தாம் மகிழ்ச்சியுடன் பேசவில்லை என்றும், ஜே.வி.பி போன்ற கட்சிகள் இல்லாமல் போனால் இடதுசாரி அரசியல் இயக்கங்களுடன் உற்சாகமாக பயணிக்க நினைக்கும் மக்களே இல்லாமல் போய்விடுவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“அவர்களும் இதேபோலத்தான். அவர்கள் செய்த செயல்களாலேயே மற்ற அனைவரையும் பாதிக்கிறார்கள். ‘இடதுசாரி அரசியல்’ என்ற கருத்தே முன்னோர் காலத்திலும் நினைக்க முடியாத அளவுக்கு வீழ்ச்சியடையும். மீதமுள்ளவர்கள் முழுமையான சரிவை சந்திக்க நேரிடும்,” என விமல் மேலும் தெரிவித்தார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.


