எதிர்வரும் காலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கு, டிட்வா புயலால் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் போது வழங்கப்பட்டதுபோன்று ரூ.50 இலட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்படமாட்டாது என அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசின் வழக்கமான நடைமுறைப்படி, ஒரு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீடு அமைப்பதற்காக ரூ.12 இலட்சமும், நிலம் வழங்குவதற்காக ரூ.4 இலட்சமும் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
டிட்வா புயலுக்குப் பிறகு தற்போது இடம்பெறும் நிலச்சரிவுகளுக்கு ரூ.50 இலட்சம் வீதம் வழங்கப்படமாட்டாது என்பதை பொதுமக்களுக்கு தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும் இதுவரை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.16 இலட்சம் இழப்பீட்டு தொகை, இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் ரூ.25 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.


