web log free
December 02, 2023

'பேச்சுவார்த்தை சுமூகமாக இடம்பெற்றது'

கூட்டணி உருவாக்குவதற்காக, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடைந்துள்ளது.

சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

ஆறாம் கட்டமாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு விடயங்களில் பொதுவான இணக்கப்பாடு காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.