இந்தியாவின் புத்தகயாவில் அமைந்துள்ள, லோத்துர புத்தபகவான் புத்தத்துவம் அடைந்த புனித மஹாபோதி மஹாவிகாரையை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வணங்கி வழிபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வின் போது, புத்தகயா மஹாவிகாரையின் செயலாளர் டாக்டர் மகாஸ்வேத மகாரதி உள்ளிட்ட நிர்வாகக் குழுவினரும், பௌத்தரத்தன ஸ்வாமின், தம்மிஸ்ஸர ஸ்வாமின், கவுடின்ய ஸ்வாமின் உள்ளிட்ட மகாசங்கத்தினரின் ஆசீர்வாதங்களையும் அவர் பெற்றுக் கொண்டார்.
மேலும், 1891 ஆம் ஆண்டு அனாகாரிக தர்மபாலர் தொடங்கிய இந்தியாவின் மஹாபோதி சங்கத்தையும் அவர் பார்வையிட்டார். அங்கு, புத்தகயா மையத்தின் புனிதர் கட்டகந்துரே ஜினானந்த ஸ்வாமின், புனிதர் முல்தெனியவல சுசீல ஸ்வாமின், புனிதர் ஞானரத்தன ஸ்வாமின் மற்றும் புனிதர் வகீச ஸ்வாமின் ஆகியோருடன் சந்தித்து அவர்களின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் லிமினி ராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.


