நல்லாட்சி காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பத்திரப் பிணை (Bond) மோசடியில் இருந்து பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதி மக்கள் விடுதலை முன்னணிக்கும் (JVP) வழங்கப்பட்டதாக ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.
அந்த காலத்தில் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் சமீபத்தில் தொலைபேசி உரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்த குருகுலசூரிய, இந்த குறிப்பை தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
“நான் இலங்கையில் பெரிய அளவில் திருட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் நபர்களுடன் பழகியிருக்கிறேன்; இன்றும் பழகிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் அந்த நபர்களை எந்த நீதிமன்றமும் இதுவரை குற்றவாளிகளாக அறிவிக்கவில்லை. அவர்களுடன் பழகியதில் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால்;
‘திருட வேண்டும் என்றால், சட்ட மா அதிபர் துறை கட்டிடம், உச்ச நீதிமன்ற கட்டிடம் மற்றும் இலங்கையெங்கும் பரவி இருக்கும் நீதிமன்றக் கட்டிடங்களின் சந்தை மதிப்பை விட கூட அதிகமாகத் திருட வேண்டும்’ என்பதே.
அப்படிச் செய்தால் தான் வழக்குகளை ஒத்திவைத்துக் கொண்டு மரணிக்கும் வரை வாழ முடியும்.
நாமல் போன்றவர்கள் பெரிய பெரிய பேச்சுகள் பேசுவது அதற்காகத்தான்.
நான் இலங்கையிலும் மற்றொரு நாட்டிலும் ஊழல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் மொட்யூல்களை உருவாக்குவதில் பங்கேற்ற ஒருவராக இதைச் சொல்கிறேன். இலங்கை போன்ற ஒரு நாட்டிற்கு அந்த நபர்களை கைது செய்யும் சக்தியும் திறனும் இல்லை. தேர்தல் மேடைகளில் பேசப்படும் கோஷங்களும் கடுமையான வார்த்தைகளுமே உள்ளன.
இப்போது அனுரவைச் சுற்றியும், ஒரு அரசையே வாங்கக்கூடியவர்கள் நண்பர்களாக எத்தனை பேர் இருக்கிறார்கள்?
உதாரணமாகச் சொன்னால், அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கி ஆளுநராக நியமித்து ரணில் இரு முறை பத்திர மோசடி செய்தது மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்காக பெற்ற கடனை அடைப்பதற்காகவும், இரண்டாவது பத்திர மோசடி பொதுத் தேர்தலுக்காக பணம் திரட்டுவதற்காகவும் தான். அந்த பணத்தின் ஒரு பகுதி ஜே.வி.பி-க்கும் சென்றது.
ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்த முன்னாள் உறுப்பினர்கள், இந்த பத்திர மோசடி குறைந்தது 2007 ஆம் ஆண்டிலிருந்தே நடைபெற்று வந்துள்ளதாகவும், அதற்கு ஒரு ஃபோரென்சிக் ஆடிட் நடத்த வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
ஆனால் சிறிசேன அதை செய்யவில்லை, கோட்டாபய அதைக் செய்யவில்லை, ரணில் ஜனாதிபதியாக இருந்தபோதும் அதைக் செய்யவில்லை. ஏன் அனுரா அவர்களோ அல்லது தற்போதைய ஆட்சியோ இப்போது அந்த விசாரணையை நடத்தவில்லை? அதுவே எனக்கு இருக்கும் முக்கியமான கேள்வி.
மீதியதை பின்னர் எழுதுகிறேன்!”


