இலங்கையின் தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு கல்வி அமைச்சு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி,
தேசிய பாடசாலைகளில் 4,484 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
மாகாண சபை பாடசாலைகளில் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 6,613 ஆகும்.
மேலும்,
- மத்திய மாகாணம் – 6,318
- மேற்கு மாகாணம் – 4,630
- தெற்கு மாகாணம் – 2,513
- வடமேற்கு மாகாணம் – 2,990
- ஊவா மாகாணம் – 2,780
- வடமத்திய மாகாணம் – 1,568
- சபரகமுவா மாகாணம் – 3,994
- வட மாகாணம் – 3,271
ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 23,344 ஆசிரியர்களை நியமிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலப்பகுதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் புதிய ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


