web log free
May 05, 2026

ஒரு மருந்து குறைபாட்டினால் 9 மாதம் தடைப்பட்டுள்ள சிகிச்சை

கெரடோகோனஸ் (Keratoconus) எனப்படும் கண் நோய்க்கான அறுவைச் சிகிச்சைக்கு தேவையான மருந்து பற்றாக்குறை காரணமாக, சுமார் ஒன்பது மாதங்களாக அந்தச் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கண் மருத்துவமனை தகவல் வட்டாரங்கள் ஒரு செய்தித்தாளுக்கு தெரிவித்துள்ளன.

இந்த நோய்க்கு அவசியமான ரைபோஃப்ளேவின் (Riboflavin) மருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, நூற்றுக்கணக்கான அறுவைச் சிகிச்சைகள் தாமதமாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தேசிய கண் மருத்துவமனை இயக்குநர் ஜயருவன் பண்டார அவர்களிடம் கேட்டபோது, அந்த மருந்தை வழங்குவது ஒரே ஒரு விநியோகஸ்தர் மட்டுமே இருப்பதாகவும், அவர் மருந்தை வழங்கும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd