web log free
February 10, 2026

குழந்தைகள் தொடர்பில் 4000 வழக்குகள் நிலுவையில்

குழந்தைகள் மீதான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1998 ஆம் ஆண்டின் இலக்கம் 28 கொண்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்தங்களும் தண்டனைச் சட்டக் கோட்பாடுகளும் அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, தற்போது நாட்டின் பல பகுதிகளில் உள்ள உயர் நீதிமன்றங்களில் மொத்தம் 4,289 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகளுடன் தொடர்புடைய அசிங்கப் பதிவுகள் வெளியிடுதல், குழந்தைகளை கடத்தல், பாலியல் நோக்கத்திற்காக குழந்தைகளை பயன்படுத்துதல் அல்லது வேலைக்குக் கட்டாயப்படுத்துதல், கொடூரமாக நடத்துதல், பாலியல் பலாத்காரம் மற்றும் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றச்செயல்கள் தொடர்பாக சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd