web log free
March 13, 2026

தெரிவுக்குழுவில் இன்று முன்னிலை

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்று பிற்பகல் 02 மணியளவில் மீண்டும் கூடவுள்ளது.

இன்றைய தினம் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக உள்ளார்.

கடந்த 26ஆம் திகதி சாட்சியம் வழங்குவதற்காக தெரிவுக்குழு முன்னிலையில் ரிஷாத் பதியுதீன் ஆஜரான போதிலும் அவரிடம் விசாரணை நடத்தப்படாமல் தெரிவுக்குழு ஒத்திவைக்கப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் 02 மணிக்கு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவுக்குழு உறுப்பினர்கள் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Friday, 28 June 2019 05:11
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd