web log free
May 18, 2026

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

ரயில் சேவையை அத்தியாவசிய போக்குவரத்து சேவையாக அமுல்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட நிலையில், ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே திட்டமிட்டபடி ​நேற்று (27) நள்ளிரவு முதல் ரயில் தொழிற்சங்க ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அடையாள பணிப் புறப்பணிப்பு இன்று நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படும் என, ரயில் தொழிற்சங்கம் கூறியுள்ளது.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு வழங்காமையை முன்னிறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd