web log free
July 02, 2025

'அனைவருக்கும் இடமளிக்கவும்'

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் எந்தவொரு நபருக்கும் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட முடியும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தையில் அனைத்து இனத்தவர்களுக்கும் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்குமாறு வென்னப்புவ பிரதேச சபை தலைவருக்கு மாரவில நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முஸ்லிம்கள் குறித்த சந்தையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு வென்னப்புவ பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேராவினால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மாரவில நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

Last modified on Friday, 28 June 2019 07:55
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd