web log free
June 21, 2026

எம்.ஏ.சுமந்திரனுக்கு நீதியமைச்சர், பிரதமர் பதவி?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் நீதி அமைச்சர் பதவியை ஏற்கும்படி தன்னைக் கோரினார் என்று தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேபோல,

நாடாளுமன்றில் நாடாளுமன்றில் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் உரையாற்றிய போது, நாட்டின் பிரதமராக சுமந்திரன் வரவேண்டும் என்றும் உரையாற்றியதாகவும் தெரிவித்த அவர்,
தனிப்பட்ட நலனுக்காக சுயலாபத்திற்காக தாம் செயற்படுவதாக இருந்தால் அவற்றையெல்லாம் செயற்படுத்தியிருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd