web log free
June 21, 2026

பெட்ரோலை வீடுகளில் சேமித்து வைத்திருப்பது தடை

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் இருந்து பீப்பாய்கள் (டிரம்/கண்டெய்னர்கள்) மூலம் எரிபொருள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை மீறினால் அந்த நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் அமலில் உள்ள சட்டங்களின்படி உரிய அனுமதிப் பத்திரம் இன்றி எரிபொருளை, குறிப்பாக மிகுந்த தீப்பற்றும் தன்மை கொண்ட பெட்ரோலை வீடுகளில் சேமித்து வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

போர் நிலை நீடித்தால், கச்சா எண்ணெயை அமெரிக்கா அல்லது நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்தில் உடனடி பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தலைவர் வலியுறுத்தினார்.

எனினும், போர் சூழ்நிலையால் உலக சந்தையில் எண்ணெய் விலை உயர வாய்ப்புள்ளதாகவும், அது நாட்டின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயமாக இருப்பதால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd