“ஏனைய மதத்தவர்களைக் கொலை செய்யுமாறும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துமாறும், கொடூரங்களைச் செய்யுமாறும், இஸ்லாத்தில் கூறப்படவில்லை. இவ்வாறானவர்களை, இஸ்லாமியர்கள் என்று ஏற்றுக்கொள்ளவும் முடியாது. நான், ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த அமைப்பினரை, இந்த நாட்டிலிருந்து துடைத்தெறிய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” என, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் முன்னிலையான போது ரிஷாட் பதியூதீன் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது சாட்சியமளித்த அவர், சஹ்ரான் ஹாஸிம் என்ற நபரை, தான் ஒருபோதும் கண்டிருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.