web log free
May 10, 2025

அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு இன்று முதல்

2019 வரவு - செலவுத்திட்ட யோசனைகளுக்கு அமைய அரச ஊழியர்களுக்கான ஊதியம் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் சுமார் 11 இலட்சம் அரச ஊழியர்களுக்கு இரண்டாயிரத்து 500 ரூபாய் இடைக்கால கொடுப்பனவு அவர்களின் சம்பளங்களுடன் மேலதிகமாக சேர்க்கப்படும்.

அத்துடன், பாதுகாப்பு தரப்பினருக்கான கொடுப்பனவுகள் மேலும் அதிகரிக்கப்படும். ஓய்வூதிய கொடுப்பனவில் உள்ள முரண்பாடுகளை நீக்கி விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் சுமார் நான்காயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd