web log free
May 14, 2026

நாட்டில் விசேட பாதுகாப்பு

எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி முதல் சிங்கள-தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கை திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்ததாவது, புத்தாண்டு காலத்தில் மக்களின் பயணம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, போக்குவரத்து பொலிஸாரும் பாதுகாப்பு அதிகாரிகளும் அதிக அளவில் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையங்களை மையமாகக் கொண்டு போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் நகரங்களுக்கு பொருட்கள் வாங்க வரும்வர்கள் அதிகரிப்பதால், அதனை சமாளிக்க சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd