web log free
July 02, 2025

கதிர்காமர் படுகொலை வழக்கு நிறைவு

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சந்தேக நபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12ஆம் திகதி, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளாகி உயிரிழந்திருந்தார்.

கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான முத்தையா சகாதேவன் (வயது 62) என்பவர், கடந்த மாதம் 22 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமானார்.

இவரது மரணமானத்தற்குப் பின்னர், HC 42/26/2008 என்ற இலக்கமுடைய கதிர்காமர் கொலை வழக்கை தொடர்ந்து நடத்துவதில்லை என்று மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd