web log free
April 20, 2026

மின்வெட்டை தடுக்க இரவு நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும்

வறண்ட காலநிலை நிலவிய காலங்களில் வரலாறு முழுவதும் மின்தடை நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், தங்களது அரசு மின்தடை அமல்படுத்தாமல் இருக்க முயற்சி செய்து வருவதாகவும் ஜே.வி.பி. பிரதான செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

மின்சார நெருக்கடி உருவாக காரணம் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளே என அவர் குறிப்பிட்டார். இம்முறை நிலக்கரி தரம் குறைவாக இருந்தாலும் மோசடி எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

பகல் நேரத்தில் சூரிய மின்நிலையங்கள் மூலம் தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், இரவு நேரத்தில் நீர்மின் மற்றும் நிலக்கரி மின் உற்பத்தி குறைவதால் டீசல் மின் நிலையங்களை நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது மின்சார கட்டணத்தை அதிகரிக்கக் காரணமாக இருப்பதால், இந்த நெருக்கடியை சமாளிக்க இரவு நேரங்களில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் மக்கள் ஒத்துழைக்கலாம் என்றும் டில்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd