web log free
April 08, 2026

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று திறப்பு

நவீனமயப்படுத்தப்பட்ட கொழும்பு- புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று புதன்கிழமை திறக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் இதனைத் திறந்து பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கவுள்ளதாக கிளீன் ஸ்ரீ லங்கா செயலகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கபில சேனரத் தெரிவித்தார்.

இந்நிலையம் 585 மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.

மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் விமானப்படையினர் இதில், முக்கிய பங்காற்றினர் . இதேபோன்று பல நிறுவனங்களும் இப்புனரமைப்பு பணிகளுக்குப் பங்களித்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd