web log free
May 25, 2026

கொழும்பில் இன்று நீர்வெட்டு

லபுகம மற்றும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, இன்று (09) மேலும் சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று (09) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மத்தேகொட, பிராக்மணகம, கிரிகம்பமுணுவ, தீபங்கொட, பொலிஸ்கஸ்ஓவிற்ற வீதி, குடமாதுவ முதல் 342 பஸ் வீதி வரையான பகுதி, புபுது மாவத்தை முதல் 342 பஸ் வீதி வரையான பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அச்சபை தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd