2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களாகிய ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தனித்துவமான ஒரு சம்பவம் அல்ல என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும், 2017 ஆம் ஆண்டிலிருந்து திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்பதும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்தார்.




