web log free
April 13, 2026

விலைவாசி உயர்வால் மக்கள் கடும் நெருக்கடியில் – சஜித்

நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இதனால் எரிபொருள், எரிவாயு, மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் உரத்தின் விலைகளை குறைத்து மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசு இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் என மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், தற்போது மின்சார கட்டணம், எரிபொருள், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், விலைவாசி உயர்வுக்கு அரசாங்கம் வழங்கும் தீர்வுகள் குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவதாகவும், இந்நேரத்தில் எரிபொருள், எரிவாயு, மின்சார கட்டணம், அத்தியாவசிய பொருட்கள், உரம் மற்றும் மருந்துகளின் விலைகளை குறைப்பது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd