web log free
April 16, 2026

பிழைகளை சரிசெய்து முன்னோக்கி செல்வோம்!

மனிதர்கள் தவறுகளைச் செய்யுவது இயல்பு என்றும், அவற்றைச் சரிசெய்து முன்னேறுவது முக்கியம் என்றும் நாமல் ராஜபக்ச எம்பி தெரிவித்துள்ளார. 

இவர் இந்தக் கருத்துகளை நேற்று நடைபெற்ற புத்தாண்டு சடங்குகளுக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது:

அனைவருக்கும் இனிய சிங்கள–தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தப் பாரம்பரிய திருநாளை சிங்களரும் தமிழரும் ஒன்றிணைந்து கொண்டாடுவது நாட்டின் பண்பாட்டு ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அந்தப் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கும் பாதுகாத்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சவால்களால் நிறைந்த ஆண்டாக இருந்தாலும், அவற்றை வென்று நல்ல மாற்றமாக மாற்றிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார். ஒவ்வொருவருக்கும் தவறுகள் நேரிடலாம், ஆனால் அவற்றை உணர்ந்து திருத்திக் கொண்டு முன்னேறுவது தான் முக்கியம் என்றார்.

நாட்டின் வரலாற்றிலும் சில தவறுகள் இடம்பெற்றிருக்கலாம், அவற்றை ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் ஒரு நல்ல நாடாக உருவாக இளைஞர்கள் முன்னிலை வகிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் திறமையான மற்றும் நவீன சிந்தனையுடன் கூடிய இளைஞர்கள் அதிகம் உள்ளனர். அவர்களின் திறன்களை நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும், இளைஞர்களின் மீது நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் 1983, 1988–89 மற்றும் 2022 போன்ற சில நிகழ்வுகளில் இளைஞர்களும் பொறுப்பு ஏற்க வேண்டியிருந்தாலும், சில தனிப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் முழு இளைஞர் தலைமுறையையும் மதிப்பிட முடியாது என்றும் அவர் கூறினார்.

இளைஞர்களின் திறமைகளை ஒருங்கிணைத்து நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும்நாமல் ராஜபக்ச எம்பி வலியுறுத்தினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd