ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளவில் விமான எரிபொருள் பற்றாக்குறை உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது.
உலக எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20% நடைபெறும் முக்கிய வழியாக உள்ள ஹோர்முஸ் நீரிணை பாதிக்கப்பட்டதால், ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஐரோப்பிய ஆணையம் தற்போதைக்கு எரிபொருள் முழுமையாக முடிந்துவிடவில்லை என்றாலும், விரைவில் வழங்கல் பிரச்சனைகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. International Energy Agency (IEA) மற்றும் Rystad Energy ஆகியவை மே அல்லது ஜூன் மாதத்திலிருந்து விமான ரத்தாகத் தொடங்கக்கூடும் என கணித்துள்ளன.
ஐரோப்பா போதுமான அளவு மாற்று எரிபொருள் பெற முடியாவிட்டால், ஜூன் மாதத்தில் கையிருப்பு மிகவும் குறைந்த நிலைக்கு செல்லும் அபாயமும் உள்ளது.




