பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது போதைப்பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரணதண்டனை வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தின் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி உயர்நீதிமன்றத்தில் நேற்று 10 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சில கைதிகளும் இவர்களில் அடங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.