web log free
May 01, 2026

நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மர்ம மரணம்!

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் மாயமான சம்பவம் தொடர்பில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிதியமைச்சின் 4 அதிகாரிகளில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்‌ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறப் பகுதியில், இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடலில் வெட்டு காயம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா? மற்றும் இது ஒரு அனர்த்தமா என்ற கோணத்தில் விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹெக்கர்களால் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், இவருடன் சேர்த்து நான்கு அதிகாரிகளைப் பணியிடைநீக்கம் செய்ய நிதி அமைச்சு அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.  

ரங்க ராஜபக்‌ஷ குளியாப்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவனும், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவனும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd