web log free
May 08, 2026

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு

இலங்கையில் நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.

மாற்றப்பட்ட புதிய விலைகளின் முழு விபரம்:

பெற்றோல் 92 ஒக்டேன்: ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 410.00 ரூபா ஆகும்.

பெற்றோல் 95 ஒக்டேன் (யூரோ 4): ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 470.00 ரூபா ஆகும்.

ஓட்டோ டீசல்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 392.00 ரூபா ஆகும்.

சூப்பர் டீசல் (4 ஸ்டார்): ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 458.00 ரூபா ஆகும்.

மண்ணெண்ணெய்: ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 265.00 ரூபா ஆகும்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd