web log free
June 18, 2026

2.5 மில்லியன் டாலர் மோசடியில் அரசாங்கத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை

“ஹேக்கர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் 2.5 மில்லியன் டாலர், மத்திய வங்கியில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப ரீதியான பிரச்சினை மட்டுமே என்று பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்தார்.

இந்தச் செயல் அரசியல் அதிகாரத்தின் செயல் அல்ல.

ஒரு பாடசாலையை அதிபர் நடத்திக் கொண்டிருக்கும்போது, ​​வகுப்பறையில் நிகழும் ஒரு சம்பவத்திற்கு கல்வி அமைச்சரை நேரடியாகத் தொடர்புபடுத்துவது போன்ற உதாரணம் இது.

இது மத்திய வங்கியில் தொழில்நுட்ப நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக நிகழ்ந்த ஒரு சம்பவம்.

இந்தச் சம்பவம் குறித்து அரசாங்கம் அறிந்தவுடனேயே, அதில் தலையிட்டு, அறிவுறுத்தல்களை வழங்கி ஒரு விசாரணை செயல்முறையைத் தொடங்கியது.

ஜனாதிபதி அனுர திசாநாயக்க மத்திய வங்கிக்கு வந்து பணியாற்றவில்லை. செயலாளரிடமிருந்தே தலையீடு இருந்தது. பின்னர் இது அதிகாரிகளால் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை என்று தற்போது தெரிகிறது.

நிதிச் செயலாளர், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிலும், அரசியலிலும் அனுபம்கொண்டு எங்களுடன் பணியாற்றியவர். அவரது அறிவை நாங்கள் அறிவோம். அவர் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவார் என்று ஜனாதிபதி நம்பினார்.

இரண்டரை மில்லியன் டாலர்கள் இழப்பு செயலாளரின் திறமையின்மையால் ஏற்பட்டது என்று யாராவது குற்றம் சாட்டினால், நான் அதையும் நிராகரிக்கிறேன். அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட பணமும் காணாமல் போனது. தற்போது அது குறித்தும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் இவை எதுவும் ஒரு அரசியல் செயற்பாட்டின் விளைவு அல்ல. நாங்கள் எங்கள் கைகளைக் கழுவிக்கொள்வதற்காகவும் இதைக் கூறவில்லை” என்பதாக அவர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கியிருந்தது. 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd