web log free
April 06, 2026

ஹேமசிறி, பூஜிதவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாற அறிவுறுத்தல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமசிங்கவுக்கு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா நேற்று அனுப்பிய கடிதம் ஒன்றிலேயே இதுதொடர்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

முன்கூட்டியே தகவல்கள் அளிக்கப்பட்டிருந்தும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, இவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த அறிவுறுத்தலை அடுத்து ஹேமசிறி பெர்னான்டோவும், பூஜித ஜயசுந்தரவும் கைது செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd