web log free
June 25, 2026

மகிந்தவை தொட முயற்சித்தால் பின்விளைவு மிகமோசம்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அரசியல் வேட்டையை நடத்த அரசாங்கம் முயற்சித்தால், அதற்கு எதிராக இலட்சக்கணக்கான மக்களின் அடுத்த கட்ட போராட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை அரசாங்கம் காண நேரிடும் என்றுமகிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தவறுகளை வெளிப்படுத்துபவர்கள் அல்லது முக்கிய சாட்சிகளாக இருக்கும் நபர்கள் அசாதாரணமான முறையில் உயிரிழக்கும் நிலைமை காணப்படுவதாகவும், 323 கண்டெய்னர் மோசடி மற்றும் பொருளாதார களஞ்சிய மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களின் மரணங்கள் அதற்கான உதாரணங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அரசியல் நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்தி வருவதாகவும், ஒரு சுயாதீன ஆணைக்குழுவாக மக்கள் பணத்தை கொள்ளையடித்த உண்மையான மோசடிகள் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு சவால் விடுப்பதாகவும் மனோஜ் கமகே தெரிவித்தார்.

ராஜபக்ஷ குடும்பத்தின் எந்தத் திருட்டையும் நிரூபிக்க முடியாமல் அரசாங்கம் மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பதாகவும், மகிந்த ராஜபக்ஷவை தொட முயற்சிப்பதன் மூலம் அரசாங்கம் தவறான முடிவெடுக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd