web log free
July 01, 2026

திஸ்ஸ குட்டிக்கு அரசாங்க தரப்பில் அழைப்பு

ஆட்சியை நடத்திச் செல்ல அனுர சகோதரருக்கு உதவுமாறு இன்று அதிகாலையே அழைப்பு வந்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக ஊடக கணக்கில் அவர் ஒரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக எதிர்க்கட்சியின் சில அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு ஆட்சியில் இணையுமாறு அரசாங்க தரப்பில் இருந்து அழைப்புகள் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை, அரசாங்க தரப்பும் அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் நாட்டை கட்டியெழுப்புவதற்கு யாரும் ஒத்துழைக்கலாம் என்றும் அதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd